வவுனியா ஏ9 வீதியில் கோரவிபத்து; 24 வயது இளைஞர் உயிரிழப்பு..

0
181

இன்றைய தினம் அதிகாலை வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா  இளைஞர் ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ்ரக வாகனத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

வவுனியா ஏ9 வீதியில் கோரவிபத்து; இளைஞர் பரிதாப உயிரிழப்பு | Accident Vavuniya A9 Road A Tragic Loss Of Youth

 முந்திச்செல்ல முற்பட்டபோது நேர்ந்த விபரீதம்

விபத்தில் 600மீற்றர் தூரம் வரையில் மோட்டார் சைக்கில் தரையில் இழுத்துச்சென்றுள்ளாதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான வவுனியா குருமன்காடு பகுதியினைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின்  சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் கோரவிபத்து; இளைஞர் பரிதாப உயிரிழப்பு | Accident Vavuniya A9 Road A Tragic Loss Of Youth

விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளையும்  வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.