நாடாளுமன்றில் பெண் ஊழியர்கள் துஸ்பிரயோகம்; மற்றுமொருவர் சிக்கினார்!

0
195

 நாடாளுமன்றில் அழகான பெண் ஊழியர்களை நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாடாளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தின் மற்றுமோர் ஊழியர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி குறித்த ஊழியர் இன்று (25) பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றில் பெண் ஊழியர்கள் துஸ்பிரயோகம்; மற்றுமொருவர் சிக்கினார்; தூக்கி வீசிய அதிகாரி! | Abuse Of Female Staff In Parliament Srilanka

 உதவியாளர் பணி இடைநிறுத்தம்

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி திருமதி குஷானி ரோஹனதீரவினால் குறித்த திணைக்களத்தில் பணிபுரியும் உதவியாளர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அந்த திணைக்கள அதிகாரி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்த ஊழியர், உதவியதாக விசாரணைகளின் போது தெரியவந்தது.

நாடாளுமன்றில் பெண் ஊழியர்கள் துஸ்பிரயோகம்; மற்றுமொருவர் சிக்கினார்; தூக்கி வீசிய அதிகாரி! | Abuse Of Female Staff In Parliament Srilanka

இதையடுத்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற பராமரிப்பு துறையின் உதவி வீட்டுக்காப்பாளர் முன்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தலைமையில் 3 பெண் அதிகாரிகள் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கை இன்னும் சில நாட்களில் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.