நூறு மணி நேரம் சமைத்து இளம்பெண் உலக சாதனை!

0
381

தொடர்ந்து நூறு மணி நேரம் சமைத்து நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் உலக சாதனை படைத்துள்ளார்.

100 மணி நேரத்தில் 110 உணவு வகை உணவுகள்

சமூகவியல் பட்டதாரியும் சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே, உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என 100 மணி நேரத்தில் 110 உணவு வகைகளை சமைத்து காட்டினார்.

சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை தொடர்ந்து உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர்.

அதேவேளை 2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து 88 மணி நேரம் சமைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த இந்திய பெண்மணி லதா டாண்டன் புதிய சாதனையாளர் ஹில்டா பாஸேக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நூறு மணி நேரம் சமைத்து உலக சாதனை! | World Record Of Cooking For One Hundred Hours