நடுவீதியில் காவல்துறையினருடன் முரண்பட்ட பெண்! தீயாய் பரவும் காணொளி

0
21

கம்பஹா கொட்டுகொட-உடுகம்பொல பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக உயர் அதிகாரி ஒருவரின் தங்கை என கூறி நடு வீதியில் பொலிஸாரிடம் முரண்பட்டு கூச்சலிட்ட பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து விதிமீறலுடன் காரை ஓட்டிச் சென்ற ஒரு பெண்ணொருவர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தபோது, அவர் தொடர்ந்து ஓட்டிச் சென்றார். பின்னர் போக்குவரத்து அதிகாரிகள் காரைத் துரத்திச் சென்று உடுகம்பொல பகுதியில் சோதனைக்காக நிறுத்தியபோது தான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் வீதி விதிமுறைகளை முறையாக கடைப்பித்தே வாகனத்தை செலுத்தியதாகவும் தன் மீது வீணான பலி சுமத்த வேண்டாம் எனவும் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

தனது சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதாகவும் தன்னை அவமானப்படுத்த வேண்டாம் என்றும் கத்தியுள்ளார். கடமையிலிருந்த பொலிஸார் முகம் சுழிக்கும் வகையில் கத்தி கூச்சலிட்டுள்ளதுடன் சாரதி அனுமதி பத்திரத்தையும் பறித்து கடும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பொலிஸார் காணொளியாக பதிவு செய்த போது பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக உயர் அதிகாரி ஒருவரின் பெயரை கூறி அவரது தான் அவரது தங்கை என்றும் பொய் கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.