கொழும்பில் பெருந்தொகை பணத்தை வைப்புச் செய்த பெண் கைது!

0
3653

கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்ததுடன் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைத்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணே சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு சந்தேகத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலையான வைப்பு

6 இலட்சம் ரூபா நிலையான வைப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு என்பவற்றில் குறித்த தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பில் பெரும் தொகை பணம் வைப்பிட்ட பெண் அதிரடியாக கைது! | Deposited A Large Amount Arrested

மேலும் வங்கிக் கிளையொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 பவுண்களுக்கும் அதிகமான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.