யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பதாக ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கையில் கட்டுடன் பாடசாலைக்கு அருகில் தினமும் நின்று யாசகம் பெறுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்க உத்தியோகஸ்தர்களே மாத இறுதியில் அல்லாடும் நிலைக்கு செல்லும் நிலையில் குறித்த பெண் யாசகம் பெற்று சேர்க்கும் மாத வருமானம் பெரும் தொகை பணம் கிடைப்பதாக கூறப்படுகின்றது.
அதேவேளை வடக்கில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதோடு யாழ் நகர் பகுதிகளில் மட்டுமல்லாது நல்லூர் கந்தன் பெருவிழா காலத்தில் சில பெண்கள் யாசகம் பெற தமது குழந்தைகளையும் அழைத்து வருவதாகவும் இதனால் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கில் யாசகம் பெறுவோரை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக வடமாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.