சரியாக சமைக்காத மீன் சாப்பிட்ட பெண்… உறுப்புகளை இழந்து உயிருக்கு போராடும் சோகம்..

0
273

பெண் ஒருவர் சரியாக சமைக்காத உணவை உட்கொண்டதால் அவரது 4 உறுப்புகள் செயலிழந்து தற்போது மரணத்தருவாயில் இருக்கும் அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.

சரியாக சமைக்காத உணவு

அமெரிக்காவில் கலிபோர்னியா நகரைச் சேர்ந்த லாரா பராஜாஸ் என்ற 40 வயதான பெண் முறையாக சமைக்காத உணவை சாப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் நண்பர்கள் கூறுகையில், அதிக ஆபத்தான பாக்டீரியாவில் மாசடைந்த திலாப்பியா மீன்களை சரியாக வேகவைக்காமல் உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

மீன் சாப்பிட்ட பெண்... 4 உடல் உறுப்புகளை இழந்து உயிருக்கு போராடும் சோகம் | Woman Eating Polluted Fish 4 Organs Damage

குறித்த பெண்ணிற்கு கடந்த 14ம் தேதி உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், லாராவின் தோழியான அன்னா மெசினா பேசுகையில், பயங்கரமான இந்த விளைவால் எங்களுக்கு கஷ்டமாக இருப்பதாகவும், உள்ளூர் சந்தையில் மீன் வாங்கி சாப்பிட்ட பின்பே லாரா இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்டு உயிரிழந்த நிலைக்கு சென்ற லாரா, தற்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விரல்கள், பாதங்கள், கீழ் உதடு அனைத்தும் கருப்பாக மாறியதுடன், உடலில் புண்களும் அதிகமாக இருக்கின்றது. சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மீன் சாப்பிட்ட பெண்... 4 உடல் உறுப்புகளை இழந்து உயிருக்கு போராடும் சோகம் | Woman Eating Polluted Fish 4 Organs Damage

லாரா விப்ரியோ வல்னிஃபிகஸ் நோயால் லாரா பாதிக்கப்பட்டுள்ளாராம். இவை பொதுவாக கடல் உணவு மற்றும் கடல் நீரில் உள்ள கொடிய பாக்டீரியாவாகும். ஆதலால் மீன் உணவுகளை நன்றாக சமைத்து சாப்பிடுவதே உயிருக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.