கொழும்பு பெண்ணொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றையதினம் (04-09-2022) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பெண்ணை களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.