சிவனொளிபாத மலையில் ஏறிக்கொண்டிருக்கும்  போது குழந்தை பெற்ற பெண்!

0
363

சிவனொளிபாத மலைக்கு இரத்தினபுரி பகுதியில் இருந்து நேற்றையதினம் (11-02-2023) தரிசனம் செய்ய வந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏறிக்கொண்டிருந்த 32 வயதுடைய பெண்னுக்கு ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

சிவனொளிபாத மலை ஏரிக் கொண்டிருக்கும் போது குழந்தையை பிரசவித்த பெண்! | Sivanolipatha Malai Woman Has Given Birth To Child

பிறகு அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.