ஈரானில் பொது ஒழுக்கத்தை மீறியதற்காக அதிகாரிகள் பெண் ஒருவரை 74 முறை சவுக்கால் அடித்துள்ளதுடன் தலையை மறைக்காததற்காக அபராதமும் விதித்துள்ளனர்.
தண்டிக்கப்பட்ட Roya Heshmati என்பவர் தெஹ்ரானில் பரபரப்பான பொது இடங்களில் அவமானகரமான முறையில் நடந்து கொண்டுள்ளதுடன் அதை ஊக்குவித்துள்ளார் என்றும் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அனைத்துப் பெண்களும் கழுத்தையும் தலையையும் மறைக்க வேண்டும்
அந்த பெண்ணுக்கு ஈரானிய சட்டத்தின் படியும், ஷரியா முறைப்படியும் பொது ஒழுக்கங்களை மீறியதற்காக அவருக்கு 74 தடவைகள் கசையடி தண்டனை விதிக்கப்பட்டது.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானில் உள்ள அனைத்துப் பெண்களும் கழுத்தையும் தலையையும் மறைக்க வேண்டும் என்று சட்டப்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது இந்த நடைமுறை அதிகரித்தது. எனினும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதிகாரிகள் அதிகளவில் நடவடிக்கை எடுத்தாலும் ஆடைக் கட்டுப்பாட்டை மீறுவதற்கான சாட்டையடிகள் ஈரானில் பொதுவானதாகவே கருதப்படுகிறது.

இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானில் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி சிறப்பு பொலிஸ் காவலில் செப்டம்பர் 2022ல் இறந்த நிலையில் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை உருவானது.
இந்நிலையில் தற்போது ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறப்படும் Roya Heshmati என்பவருக்கு 74 கசையடியுடன் 12 மில்லியன் ஈரானிய ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Terror y terrorismo en Irán
— nazanin (@nazaninarmanian) January 6, 2024
La banda criminal del Estado Islámico ejecuta la pena d
74 latigazos a Roya Heshmati
una de las PARTISANAS iraníes q desobedecen la
orden del régimen fascista d llevar su VELOESVÁSTICA pic.twitter.com/e1xHgoc9mZ