யாழ்ப்பாணம் முகமலையில் கோர விபத்து; 25 பேர் வைத்தியசாலையில் (Photos)

0
428

A9 நெடுஞ்சாலையின் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதிக்கும் முகமாலை சந்திக்கும் இடையில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனமும் கன்னிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

காயமடைந்தோர்

விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் முகமாலையில் கோர விபத்து; 46 பேர் படுகாயம்(Photos) | 25 Injured In Vehicle Accident

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது டிப்பர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இரண்டாம் இணைப்பு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேருந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

யாழ் முகமாலையில் கோர விபத்து; 46 பேர் படுகாயம்(Photos) | 25 Injured In Vehicle Accident

பேருந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மற்றும் யாழ் வைத்தியசாலையில்

காயமடைந்தவர்கள் குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் முகமாலையில் கோர விபத்து; 46 பேர் படுகாயம்(Photos) | 25 Injured In Vehicle Accident

ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.