தமிழல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 யில் இந்த வாரம் பொம்மை டாஸ்க் இடம்பெற்று வரும் நிலையில் இதனால் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டைகள் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
முன்னதாக முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, சொந்த முடிவு எடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற சாந்தியும் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது.


பொம்மை டாஸ்க்கிற்கு முன்பு வரை கூட சண்டை போட்டாலும் உடனடியாக ஒட்டி விடுவார்கள். ஆனால், இந்த டாஸ்க்கிற்கு பிறகு தொடர்ந்து சண்டை என வாரம் முழுக்க ஓயாமல் அரங்கேறி வருகிறது.
அதிலும், பொம்மை டாஸ்க்கில் அனைவரும் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டு விளையாட நடுவில் சிக்கிய ஷெரினா, கீழே விழுந்து காயம் அடைகிறார்.

இதற்கு தனலட்சுமி தான் காரணம் என அசீம் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்கள். மறுபக்கம் அவர் இல்லை என்றும் விக்ரமன் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தனலட்சுமிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
இப்படியே பிக் பாஸ் வீட்டில் ரணகளமான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் குயின்ஸியிடம் ஷெரினா பேசிய விஷயங்கள் இன்னும் கேள்விகளை தான் எழுப்பி உள்ளது.
குயின்ஸியிடம் பேசும் ஷெரினா, “எனக்கும் நான் விழுந்தது பற்றி தெளிவு வேண்டும். என் முன்னாடி தனலட்சுமி இருந்ததால் அவராக இருக்கும் என தோன்றியது.

ஆனால், உண்மை என்ன என வரும் போது தெரிந்து கொள்ளலாம். அப்படி தனலட்சுமி காரணம் இல்லை என தெரிந்தால், அவரிடம் நான் போய் மன்னிப்பு கேட்பேன். ஆனால், என்னை யாரோ தள்ளி விட்டார்கள் என்பது மட்டுமே எனக்கு தெரியும்” என்கிறார்.
இதனால், தனலட்சுமி தான் தள்ளி விட்டார் என்பதில் ஷெரினா உறுதியாக இல்லை என்பது மட்டும் தற்போது தெரிய வந்துள்ளது.