சாலையில் நடந்து சென்ற உயரமான பெண்: அருகில் சென்றவர்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்

0
169

ஒரு மனிதன் உயரமாக இருந்தாலும் சரி குள்ளமாக இருந்தாலும் சரி அவர்களை வித்தியாசமாக பார்க்கும் உலகம் தான் இது. அதனடிப்படையில் உயரமாக இருப்பதால் தனக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவத்தை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார் நடாலியா வீரு என்ற பெண்.

குறித்த வீடியோவில் சன நெருக்கடி அதிகமுள்ள சாலையில் நடாலியா நடந்து செல்கிறார். அப்போது அவரை கடந்து சென்றவர்கள் அவர்களது தலையைத் திருப்பி நடாலியை பார்க்கத் தவறவில்லை.

6 அடி 7 அங்குலம் உயரமுள்ள ஒரு பெண்ணை ஆச்சரியமாக பார்த்ததோடு மட்டுமல்லாது, உங்கள் உயரத்தை நான் வாடகைக்கு எடுத்துக் கொள்ளட்டுமா? என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது 2.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.