டிப்டப் ஓல்ட் லேடி தோற்றத்தில் வந்த சந்தேகநபர் ஒருவர் வங்கியில் கொள்ளை அடித்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
தென்கிழக்கு அட்லாண்டாவில் உள்ள ஹென்றி கவுண்டி பகுதியில் திங்கட்கிழமை இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பதாக மேக்டோனாக் பொலிஸார் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

6 அடி உயரம், மெலிந்த தேகம், பூப்போட்ட உடை, வெள்ளை ஷூ, ஆரஞ்சு க்ளவ்ஸ், தலையில் வெள்ளை நிற விக், முகம் மற்றும் கழுத்தில் கருப்பு நிற மாஸ்க் என அந்த சந்தேக நபர் தோற்றமளித்துள்ளார்.
பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவலின் படி மெக்டோனக் நகரில் உள்ள சேஸ் வங்கிகுள் நுழைந்த அந்த மர்ம நபர் வங்கி ஊழியர் ஒருவரிடம் குறிப்பு சீட்டு ஒன்றை கொடுத்ததாகவும் அந்த குறிப்பில் குறிப்பிட்ட தொகையை கொடுக்குமாறும் இல்லாவிட்டால் தன்னிடம் துப்பாக்கி உள்ளது என குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பணத்தை பெற்று கொண்ட பின் பதிவு செய்யப்படாத வெள்ளை நிற காரில் ஏறி சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளதோடு வேடமிட்டிருந்த அந்த நபரின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
மேலும் கடந்த மே மாதம் பாரிஸில் உள்ள லோர்வ் அருங்காட்சியகத்தில் வயதான பெண்மணி போல் வேடமணிந்த ஒருவர் சக்கர நாற்காளியிலிருந்து தாவி எழுந்து மோனாலிஸா ஓவியத்தின் மேல் கேக்கை தடவ முற்பட்டது குறிப்பிடத்தக்கது.