தனது மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் 59 வயதான சைப்ரஸ் பிரஜை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 59 வயதான சைப்ரஸ் பிரஜை 38 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் சைப்ரஸில் பணிப்புரியும் போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னை மனைவி தாக்குவதாக தெரிவித்து சைப்ரஸ் பிரஜை முறைப்பாடளித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.