பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கையின் தமிழ் பெண் ஒருவருக்கு வரிசையில் முதல் இடம் கிடைத்துள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமையில் (12-09-2022) இருந்து இந்த வரிசை ஆரம்பமானது.
இதில் 56 அகவைக்கொண்ட இலங்கை வம்சாவளி பெண்ணான வனேசா நந்தகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தும் வரிசையில் முதல் இடம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தமது குடும்பம் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பெரும் அபிமானிகள் என்று வனேசா நந்தகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
இது அவர்கள் இலங்கைக்கு வழங்கிய சுதந்திரத்துக்காக திருப்பிச் செலுத்தும் நன்றியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுநலவாயத்துக்காக அவர்கள் செய்தமையை பாராட்ட வேண்டும் என்றும் வனேசா நந்தகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்று பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்படும் மகாராணியின் உடலத்துக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.