வடக்கு இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட அவசர உதவி இலக்கம்!

0
465
Red Vintage Telephone Isolated

சிறுவர் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் வடமாகாண சபை விசேட அவசர உதவி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி 070 666 66 77 என்ற இந்த இலக்கம் நேற்று (25) முதல் செயற்படும் என வடமாகாண சபை அறிவித்துள்ளது.

வழிகாட்டல்கள் , ஆலோசனைகள்

உணவு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு, உளவியல் மற்றும் தொழில்சார் தேவைகள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பதில்களை வழங்க இந்த தொலைபேசி இணைப்பு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்! | Special Phone Number In The North

அத்துடன் பாடசாலை மாணவர்கள் உட்பட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்களின் நல்ல திட்டங்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் வடமாகாண சபை தெரிவித்துள்ளது.

மேலும் போதைப்பொருள் மற்றும் குடும்ப வன்முறைகள் அற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி உதவிக்கு இந்த இலக்கத்தை அழைக்குமாறு வடமாகாண ஆளுநரின் செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்