கண்டி மக்களுக்கு விசேட அறிவிப்பு; மேலதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு..

0
168

இலங்கையில் நடைபெறவுள்ள எசல பெரஹெர மற்றும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்காக ஹோட்டல் அறைகள் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில், கிரிக்கட் ரசிகர்களுக்கான தங்குமிட வசதிகள் குறித்து பெரும் கோரிக்கை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, அந்த மாகாணங்களில் மக்கள் வீடுகளில் கூடுதல் அறை, வீட்டு வசதி அல்லது வேறு ஏதேனும் தங்குமிடங்களை வழங்க முடிந்தால், இலங்கை சுற்றுலாத்துறையில் பதிவு செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என இலங்கை சுற்றுலா அதிகாரசபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா

கிரிக்கெட் ரசிகர்களுக்காக தமது வீடுகளில் மேலதிக அறைகளை வழங்க உத்தேசித்துள்ள வீட்டு உரிமையாளர்களுக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தற்காலிக பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கண்டி மக்களுக்கு விசேட அறிவிப்பு - மேலதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு | Sri Lanka Tourism Tourists Kandy People Rooms

வீடு வைத்திருக்கும், நபரின் பெயர், வாடகைக்கு உள்ள அறைகளின் எண்ணிக்கை, வீடு அல்லது தங்குமிடத்தின் முகவரி, ஒரு அறைக்கு ஒரு இரவுக்கு அறவிடப்படும் கட்டணம் போன்ற தொடர்புத் தகவல்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கி பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

வீட்டு உரிமையாளர்கள்

பதிவு அங்கீகரிக்கப்பட்டவுடன், வீட்டு உரிமையாளர்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் இணையத்தளத்தில் தங்குமிடங்களை பட்டியலிட முடியும்.

கண்டி மக்களுக்கு விசேட அறிவிப்பு - மேலதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு | Sri Lanka Tourism Tourists Kandy People Rooms