பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அந்த படைகள் அஞ்சும் பாம்பையை பெண் ஒருவர் அசால்ட்டாக கையால் பிடித்து செல்லும் காணோளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெண்கள் பலர் கரப்பான் பூச்சி, பல்லி என்றாலே நடுங்குவார்கள். சமூக வலைத்தளங்களில் வெளியான அக்காணொளியில் அலுவலகம் ஒன்றுக்குள் சுமார் 6 ஆடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்து கொண்டுள்ளது.
ஆண்கள் உட்பட ஊழியர்கள் அனைவரும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க இளம்பெண் ஒருவர் வந்து சற்றும் பயமின்றி அந்த 6 அடி நீளமுள்ள பாம்பை, நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை பிடிப்பதுபோல கைகளால் பிடித்து பை ஒன்றுக்குள் போட்டு எடுத்துச் செல்கின்றார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நிலையில் நெட்டிசன்கள் இந்த வீரப் பெண்மணியை புகழ்ந்துள்ளனர்.