மத்திய ஐரோப்பாவில் அதிர்ச்சி சம்பவம்; 10 பேரை கொன்ற மாணவனால் அதிர்ச்சி

0
247

மத்திய ஐரோப்பாவின் பிராக்கில் (Prague) உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செக் குடியரசில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு இது எனவும் கூறப்படுகிறது. சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைக் கட்டிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

 தீவிரவாத நோக்கத்துடன் தொடர்புடையது இல்லை

மாணவன் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த சம்பவம் எந்த தீவிரவாத நோக்கத்துடனும் அமைப்புடனும் தொடர்புடையது இல்லை என செக் உள்துறை அமைச்சர் விட் ரகுசான் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸார் ஆய்வு நடத்திவருவதாகவும் கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.