மன்னாரில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட அரியவகை மீன்; இவ்வளவு நீளமா?

0
210

மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்தும் நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்புர் மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இது இன்றைய தினம் (07) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே மீனவரின் மீன் பிடி வலையில் அம் மீன் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பின் தோற்றம் கொண்ட மீன் 

பாம்பின் தோற்றம் கொண்ட அம் மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது பெரும்பாலும் இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது.

அவ்வாறு சிக்குகின்ட மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும். ஆனால் இன்றைய தினம் பிடிபட்ட மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதாக காணப்படுகின்றது. இவ்வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு,உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.