பாடசாலை மாணவர்களை ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்ப்பதற்கு அழைத்து சென்ற தனியார் கல்வி நிறுவனம்!

0
567

முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களை தனியார் கல்வி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள திரையரங்கிற்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே இவ்வாறு திரையரங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து 1500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

பாடசாலை மாணவர்களை படம் பார்ப்பதற்கு அழைத்து சென்ற நிறுவனம் | Company That Took School Students To Watch Movies