16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி; அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்

0
24

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கு ஹோமாகம உயர் நீதிமன்றம் 14 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஆறு மாதங்னள் சாதாரண சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான நீண்ட விசாரணைக்குப் பிறகே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது வேலையை மறைத்து வைத்திருந்ததாகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டபோதுதான் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.