சரிகமப நிகழ்ச்சியில் சரத் நிறுத்திய இடத்தினை மீண்டும் பாடகர் கார்த்திக் இணைந்து பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சரிகமப நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கின்றது.
இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சரத் பாடும் போது ஓரிரு வரிகளை மறந்திருப்பார். அது அவ்வளவு பெரிய குறையாக இல்லை என்றாலும், அந்த வரிகளை நடுவர்கள் மீண்டும் பாடும் வாய்ப்பு கொடுத்தனர்.
அது மட்டும் இல்லாமல், நடுவர் கார்த்தி இந்த பாடலை சரத்துடன் இணைந்து பாடியுள்ளார்.
மேலும், சரத் மேடையில் தடுமாறும் போது சக போட்டியாளர்கள் அவரை போட்டியாளராக பார்க்காமல் அவருக்கு எழுந்து நின்று ஆதரவு கொடுத்தனர். இது குறித்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது.



