தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர்தான் STR சிம்பராசன். இவரது தந்தை நடிகர் டி.ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக் குறைவின் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் டி.ராஜேந்திரனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நடிகர் சிம்பு தான் உடன் இருந்து செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது முழு சிகிச்சை முடிந்த உடன் நடிகர் சிம்பு தன்னுடைய தந்தையுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி உள்ளார்.
அப்பொழுது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் துபாயில் இறங்கிய பொழுது அங்கு அவருக்கு ஒரு ஆச்சரிய பரிசு காத்துக் கொண்டிருந்தது.
அது என்னவென்றால் ஐக்கிய அரபு இராச்சியம் நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

சிம்புவுக்கு கோல்டன் விசா வாங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக தமிழ் நடிகர்களின் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசனுக்கு தான் இந்த விசா கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த இடத்தை பிடித்த சிம்புவை பல்வேறு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்திய திரும்பியவுடன் முதன் முதலாக தான் நடித்துக் கொண்டிருக்கும் பத்து தலை திரைப்படத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் முடிவாக உள்ளாராம் அது மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து வென்று தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள போவதாக தெரியவந்துள்ளது.