சகோதரியின் வீட்டில் மரச்சாமான்களை திருடி விற்பனை செய்த நபர்

0
565

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரையும் திருட்டு பொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரையும் வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

சகோதரியின் வீடு மற்றும் அயல் வீட்டில் உள்ள தளபாடங்களை திருடி விற்பனை செய்த 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சகோதரியின் வீட்டில் தளபாடங்களை திருடி விற்பனை செய்த நபர் | The Person Sold The Furniture In Sister S House

அத்துடன் அவர் திருடி விற்பனை செய்த பொருட்களை வாங்கி விட்டு அதனை ஒப்புக்கொள்ள மறுத்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.