குடும்ப உறுப்பினரின் சடலத்துடன் பல நாட்கள் தனியாக வாழ்ந்து வந்த நபர்

0
232

அமெரிக்காவில் உயிரிழந்த குடும்ப உறுப்பினரின் சடலத்துடன் நாள் கணக்கில் வாழ்ந்து வந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள சிப்சி என்ற சிறிய நகரில் வசித்து வருபவர் 61 வயதான லியாண்ட்ரூ ஸ்மித்.

இவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அந்த தகவலை வேறு யாருக்கும் தெரிவிக்காமல், அவரது உடலுடன் லியாண்ட்ரூ ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த பொலிஸார் குறித்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது லியாண்ட்ரூ, சடலத்துடன் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

உயிரிழந்த நபரின் மரணத்திற்கான காரணம் குறித்தும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.