பறக்கும் விமானத்தில் துடித்த பயணி; உயிரைக் காப்பாற்றிய இலங்கை பெண் மருத்துவர்!

0
417

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உயிரை இலங்கைப் பெண் மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

மனோரி கமகே என்ற பெண் வைத்தியரே அவரை காப்பாற்றியுள்ளார். விமானத்தில் 75 வயதான மூதாட்டி ஒருவர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் துடித்த பயணி; உயிரை காத்த இலங்கைப் பெண் மருத்துவர் ! | Flying Plane Sri Lankan Female Doctor Feat

இதனையடுத்து விமானக் குழுவினரின் அறிவித்தலின் பேரில் உடனடியாகச் செயற்பட்ட அவர் பெண்ணுக்கு அடிப்படை மருந்துகளை வழங்கி கட்டுநாயக்கவுக்குக் கொண்டு வரும் வரை தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பெண் மருத்துவரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.