இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டு பிடிப்பு

0
242

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய் இனம் இனங்காணப்பட்ட போதிலும் நாட்டில் இவ்வாறானதொரு தேங்காய் இனம் இனங்காணப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா?

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இந்த வகை தென்னை மரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சராசரி உயரம் கொண்ட இந்த தென்னை மரத்தில் விளையும் காய்களில் பெரும்பாலானவை சாதாரண தேங்காய்கள் என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டு பிடிப்பு | A New Variety Of Coconut Discovered In Sri Lanka

அதேவேளை நாட்டிலுள்ள தென்னை வகைகளில் சுமார் இரண்டு சதவீத தேங்காய்களின் கூழ் மட்டுமே இனிப்பான சுவை கொண்டது என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த தேங்காய் சாதாரண தேங்காய் போன்று தோற்றமளித்தாலும் இதன் சதை சாதாரண தேங்காயின் சதையை விட சற்று மென்மையாகவும் நார் தன்மை சற்று குறைவாகவும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் கண்டு பிடிப்பு | A New Variety Of Coconut Discovered In Sri Lanka

இந்த இனிப்பு தேங்காய் புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா என்பதை இன்னும் கண்டறிய முடியாததால் இது குறித்த ஆய்வை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.

அதேவேளை இனிப்பான தென்னை துளிர்க்க முடியாததால் இந்த புதிய வகை தென்னையை பரப்புவது கடினம் என்பதால் திசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற இனிப்பான தேங்காய்கள் அதிகமாக இருந்தால் பொதுமக்கள் தகவல்களை வழங்குமாறும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது