புதிய வரலாறு உருவாகுவதையே பார்க்கின்றோம். ஞாயிற்றுக்கிழமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் இதுவரையில் அவ்வாறு நடந்ததில்லை என முன்னாள் அமைச்சரும், பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்னும் பல விடயங்கள் நடக்கவுள்ளன. 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்களாக கருதப்படவுள்ளன.
இந்த காலப்பகுதியில் வங்கி கட்டமைப்புகள் முழுமையாக மூடப்படும். பொருளாதார துறையில் அரசாங்கம் எடுத்துள்ள ஆபத்தான தீர்மானம் இதுவேயாகும்.
இதனால் கிடைக்கும் பெறுபேறு மிகவும் பாரதூரமானது என குறிப்பிட்டுள்ளார்.