முரட்டு அரசாங்கத்தை தூக்கி எறியக் கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!

0
289

மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அதன்படி மக்களின் குறைகளுக்கு செவிசாய்க்காத அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள்வார்கள் என்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள், வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.