பெண் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

0
469

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பகுதியில் பெண் வேடமணிந்து வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு, லகோஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட நபரிடமிருந்து ரைஸ் குக்கர், தண்ணீர் மோட்டார்கள், பேஃபிள்கள், பித்தளைப் பாத்திரங்கள், பாத்திரங்கள், மாறுவேடத்தில் பயன்படுத்தப்படும் 7 புடவைகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ​​அயலவர்கள் யாரும் இல்லாத வீடுகளுக்குள் பெண் போன்று முடி சூடி, புடவை உடுத்திக்கொண்டு பிரவேசிக்கும் போது அவர்களுக்கு சந்தேகம் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.