குருநாகல், அலகொலதெனிய, மோதர்வத்தையில் வசிக்கும் நான்கு வயதான சிறுமி, தாய் மற்றும் தாத்தாவினால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அவதானம் செலுத்தியிருந்தது.
இதன்படி, குறித்தச் செய்தி உண்மையென பிராந்திய செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
சித்திரவதைக்கு உள்ளான குழந்தை மீட்கப்பட்டு தேவையான மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் குழந்தையின் பாதுகாப்புக்காக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை அதிகாரி உறுதி செய்துள்ளார்.
இதன்படி தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.