முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஹோட்டல்: தகதகனு மின்னுது!

0
134

தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கின்ற தருணத்தில் முழுக்க முழுக்க தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு ஹோட்டல் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வியட்நாம் ஹனோய் நகரில் அமைந்துள்ள டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் (dolce hanoi golden lake hotel) தான் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

25 மாடிகள் 400 அறைகள் கொண்ட நட்சத்திர ஹோட்டலான இதில் கதவுகள், ஜன்னல்கள், கழிப்பறை உள்ளிட்ட அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளன.

இந்த ஹோட்டலின் முகப்பு 54,000 சதுர அடி. இவை தங்கமுலாம் பூசப்பட்ட ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்களின் சீருடைகளும் சிவப்பு மற்றம் தங்க நிறத்தில் உள்ளன. இந்த ஹோட்டல் ஆடம்பரத்துக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.