இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்!

0
67

இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

அவர் தனது உரையில் 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்! | Speech By A Deaf Person In Parliament History

மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரசதரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகத்வசந்த டி சில்வா, ஜனாதிபதி அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தியினால் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா  உரை இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக பார்க்கப்படுகின்றது.