தொப்பி ஒன்று 6 லட்சம் டொலருக்கு ஏலம்!

0
167

1984 ஆம் ஆண்டு வெளியான “இண்டியானா ஜோன்ஸ் அண்ட தி டெம்பிள் ஆஃப் டூம்” திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி சுமார் 630,000 டொலருக்கு ஏலம் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொப்பியானது லண்டனில் உள்ள ஹெர்பர்ட் ஜோன்சன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. அதேவேளை இந்த தொப்பி, முயல்களின் மென்மையான ரோமங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.