எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு கைது: இலஞ்சம் பெறும் முயற்சி

0
106

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 03 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நேற்று காலை கட்டுப்பணத்தை செலுத்திய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.