மீண்டும் தாய்லாந்திற்கே திரும்பும் இலங்கைக்கு கிடைத்த பரிசு! கொழும்பில் திரண்ட மக்கள்

0
205

கொழும்பில் அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது இன்றைய தினம் (28.06.2023) கொழும்பிலுள்ள தாய்லாந்து உயர்ஸ்தானிகரகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கைக்கு தாய்லாந்து யானை ஒன்றை பரிசாக வழங்கியிருந்தது. 

முத்துராஜா என்று அழைக்கப்படும் அந்த யானை தற்போது சிகிச்சைக்காக மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த யானையை அழத்துச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தியும் அந்த யானையை இலங்கையிலேயே முறையானவர்களிடம் ஒப்படைத்து சிகிச்சையளித்து பராமரிக்குமாறும் கோரி இந்த போராட்டம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

https://www.facebook.com/watch/?v=606998368207932