காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

0
317

தனது காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் எலீனா டெல் என்ற 28 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

நெதர்லாந்து காதலனுடன் இலங்கைக்கு

கடந்த 31 ஆம் திகதி இவர் தனது நெதர்லாந்து காதலனுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவ்வாறு வந்த இருவரும் நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டு நேற்றையதினம் எல்ல பிரதேசத்திற்கு வந்து அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் | Swiss Woman Who Came To Sri Lanka Dies Suddenly

பதுளை வைத்தியசாலைக்கு

இதன்போது திடீரென சுகவீனமடைந்த அவர் உடனடியாக தியதலாவ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.