பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் சாலையில் லொறி மோதியதில் உயிரிழந்தார்.
ஹொட்டல் நடத்தி வந்த நடிகை கல்யாணி குராலி
மராத்தி தொலைக்காட்சி நடிகையாக இருப்பவர் கல்யாணி குராலி. இவர் ஹொட்டலும் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 10.30 மணிக்கு கல்யாணி தனது ஹொட்டலை மூடிவிட்டு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருந்து வந்த காங்க்ரீட் மிக்ஸர் ஏற்றி வந்த லொறி ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கல்யாணி பலத்த காயம் அடைந்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்த பொலிசார் கல்யாணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இறப்பதற்கு முன் வெளியிட்ட பதிவு
இதையடுத்து லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் இந்த விபத்து நடந்ததால் காயம் அடைந்த கல்யாணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
கல்யாணி விபத்துக்கு சிறிது நேரத்திற்கு முன்புகூட சில தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார், அவரின் மரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.