இத்தாலியில் வேலை வாங்கி தருவதாக கூறி கொழும்பில் ஏமாற்றிய பிரபல நடிகர்!

0
269

இத்தாலியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த கும்பலை புறக்கோட்டையில் சுற்றி வளைப்பதற்கு வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். மேலும் குறித்த கும்பலின் தலைவன் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் என தெரியவந்துள்ளது.

இத்தாலியில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு நபரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெற்று பண மோசடியை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் முக்கியமாக விளங்கும் நபர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர் என காட்டி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்தாலியில் வேலை பெற்று தருவதாகக் கூறி கொழும்பில் மோசடி செய்த பிரபல நடிகர்! | Italy Job Sri Lanka Passport Famous Actor Scammed

குறித்த நபரும் அவரது குழுவையும் மற்றொரு பண மோசடியில் ஈடுபட்டபோது ​​​​வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த மோசடி கும்பலிடம் சிக்கியவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க வந்தபோதே இந்த கும்பல் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், இத்தாலிய அரசால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலி விசாக்கள், போலி விமான டிக்கெட்டுகள் மற்றும் போலி ஆவணங்கள் அடங்கிய பல கையடக்க தொலைபேசியையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.