பாரம்பரிய நினைவு பொருட்களை மீண்டும் இலங்கைக்கு கையளிக்கும் நெதர்லாந்து தூதுக்குழு இலங்கை விஜயம்

0
393

இலங்கையிலிருந்து கொண்டுசென்ற கலாசார மற்றும் பாரம்பரிய நினைவு பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்க நெதர்லாந்து தூதுக்குழு நேற்று இலங்கைக்கு வருகை தந்தனர்.

புகழ்பெற்ற Lewke’s canon, இரண்டு தங்க வாள்கள் (சம்பிரதாய வாள்கள்), ஒரு சிங்கள கலாசாரக் கத்தி, ஒரு வெள்ளி வாள் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகிய பொருட்களையே நெதர்லாந்து மீண்டும் இலங்கைக்கு கையளிக்கவுள்ளது.

இதன்படி, நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடகத்துறைக்கான மாநிலச் செயலாளர் குணாய் உஸ்லு தலைமையிலான தூதுக்குழுவினரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இக்குழுவினர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் இன்று 28 ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த பொருட்களின் உரிமையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான ஆவணங்களில் கைச்சாத்திடவுள்ளனர்.

இந்த வரலாற்றுத் தருணத்தைக் குறிக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அரச செயலாளர் மற்றும் தூதுக்குழுவினர் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.