வித்தியாசமான முயற்சி: தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் ATM இயந்திரம்

0
102

பணம் எடுப்பதற்கு ஏ.எடி.எம் இயந்திரத்தை உபயோகப்படுத்துவோம். ஆனால் நாய்களுக்கான உணவு வழங்கும் இயந்திரம் தற்போது வைரலாகி வருகின்றது.

நாய்களுக்கு உணவு வழங்க இயந்திரமா? என்றுதானே சிந்திக்கிறீர்கள். எதிலும் ஒரு வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களில் ப்ளாஸ்டிக் போத்தல்களை போட்டால் அடுத்த பக்கத்திலிருந்து நாய்களுக்கான உணவு மற்றும் நீர் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றாடலிலுள்ள கழிவுகள் குறைவடைவதோடு நாய்களும் பசியில்லாமல் உண்ணும்.

விலங்குகள் நல ஆர்வலரான என்ஜின் கிர்கின் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2014ஆம் ஆண்டில் இத் திட்டத்தை தொடங்கினார். இதற்கு பலரும் வரவேற்பளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.