தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்று இலங்கையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சுகததாசா உள்ளரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடாக ஞாயிற்றுக்கிழமை அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்துள்ளார். மேலும் கொழும்பு ‘வன் கோல் பேஸ்’வணிக வளாகத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களை சந்தித்திருந்தார்.
இதேவேளை, பெரும்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதே வேளை,சில பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.


