வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய கார்; மூவர் உயிரிழப்பு!

0
715

அனுராதபுரம்-பதெனிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய கார்

காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.