ஜெர்மனியில் கொண்டாடப்படும் பீர் திருவிழா!

0
378

ஜேர்மனியில் மிகப்பெரிய நாட்டுப்புற விழாவான அக்டோபர்ஃபெஸ்ட் என்ற திருவிழா கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் காரணமாக தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு கொண்டாடப்படுகின்றது.

பவேரியா மாகாணத்தில் உள்ள முனிச் நகரத்தில் இந்த திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது. 34.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் சிறப்பு அக்டோபர்ஃபெஸ்ட் பீர் மற்றும் வறுத்த தொத்திறைச்சிகள் மற்றும் பன்றி இறைச்சி நக்கிள்ஸ் போன்ற சிறப்புகளுடன் கொண்டாட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திருவிழாவிற்கு பெருபாலான ஆண்கள் தோல் ஷார்ட்ஸ் (Leather ஷார்ட்ஸ்) உடைகளிலும் மற்றும் பெண்கள் dirndl எனப்படும் பாரம்பரிய ஆடை அணிந்து வருவார்கள். சனிக்கிழமை நண்பகலில் முனிச் மேயர், டைட்டர் ரைட்டர் முதல் அக்டோபர்ஃபெஸ்ட் பீர் பீப்பாயைத் தட்டினார். இது முனிச் நகரத்தின் அக்டோபர்ஃபெஸ்ட் துவக்கத்தை குறிக்கும்.

இந்த திருவிழா அக்டோபர் 3 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா முதல் முதலில் அக்டோபர்ஃபெஸ்ட் 1810ல் நடந்தது.

அதன் நீண்ட வரலாற்றில் பெரும்பாலும் போர்கள் மற்றும் தொற்றுநோய்கள் காரணமாக 26 முறை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.