மருத்துவமனை கழிவறையில் பிறந்த குழந்தை: கவ்விச் சென்ற தெரு நாய்

0
117

இந்தியாவின் பங்குரா மாவட்டத்திலுள்ள பெங்கால் அரச மருத்துவமனையில் பிறந்த குறைமாத குழந்தையை தெருநாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு ஆறு மாதத்திலேயே குறைப்பிரசவசத்தில் குழந்தை பிறந்துள்ளது. இவ்வாறு பிறந்த குழந்தையை அங்குள்ள மருத்துவமனை பிரதேசத்தில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று கவ்விச் சென்றுள்ளது.

அப் பெண் பலமுறை உதவிக்காக ஊழியர்களை அழைத்தபோதும் ஊழியர்கள் உதவ வரவில்லை என பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனையின் அலட்சியத்தினால் நிகழ்ந்த இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.