51 வயதான பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை

0
208
The dead woman's body. Focus on hand

மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரமடலாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த பெண் தனது தாயாருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். தாய் அருகில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து, குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

51 வயதான தொரமடலாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய  47 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.