55 வயது காதலியின் நகைகளை திருடிய 28 வயது காதலன்!

0
368

55 வயதுடைய காதலியிடம் இருந்து தங்க நகைகளை திருடிய 28 வயது காதலனை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராக பணிபுரியும் காதலன் பல வருடங்களாக அப்பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முற்பட்ட போது அவர்களிடையே கருத்து வேறுபாடு வந்துள்ளது.

தங்க நகைகள் திருட்டு போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனால் சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.