27 வயது இளைஞன் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

0
772

கல்தொட்ட, கூரகல ரஜமஹா விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 20 அடி உயரத்திலிருந்தே குறித்த நபர் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர் புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கல்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.